வீடியோ விவகாரம் : பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதா? கொந்தளித்த சனம் ஷெட்டி


வீடியோ விவகாரம் : பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதா? கொந்தளித்த சனம் ஷெட்டி
x

சீரியல் நடிகையின் வீடியோ விவகாரம் குறித்து நடிகை சனம் ஷெட்டி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற தொடரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்திற்கு தோழியாக இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவரின் ஆபாச வீடியோ என்று ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், இது உண்மை கிடையாது ஏ.ஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார்.

ஸ்ருதி நாராணனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பிரபல நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அவர் கூறியதாவது, "சினிமாவில் 'காஸ்டிங் கவுச்' என்று சொல்லக்கூடிய, படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் இருக்கிறது. ஆடிஷன் என்கிற பெயரில் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா?. காபி சாப்பிட கூப்பிடுவது போல, 'மேடம் அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் ஓகே தானே...' என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் என்னிடமே கேட்கிறார்கள்.

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சுருதி நாராயணன் வீடியோக்களை பார்த்து நான் அதிர்ந்து போனேன். அந்த வீடியோவை நீங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் தயவு செய்து அதை டெலிட் செய்து விடுங்கள். அவரை பார்த்து பரிதாபமும், கோபமும் தான் வருகிறது. அவரது சம்மதம் முழுவதுமாக இருப்பதால், இது கொடுமை என்று சொல்லமுடியாது. இது டீப்-பேக் வீடியோ என்று சுருதி சொல்கிறார். இது உண்மை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

சினிமா மிக மோசமாக இருக்கிறது. நடிகைகளுக்கு பாதுகாப்பும், மரியாதையும் வேண்டும். நியாயமான படவாய்ப்புகளை தரவேண்டும். இந்த கலாசாரத்தால் என்னை போல பல நடிகைகளின் சினிமா பயணம் முடங்கி இருக்கிறது. நடிகைகள் திறமைகளை நம்புங்கள். உங்களை இழக்காதீர்கள். மனசாட்சியை வெறுத்து எதையும் செய்யாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story