ஸ்ரீநிதி ஷெட்டியின் அடுத்த படத்திற்கு இந்த டைட்டிலா?... விரைவில் அறிவிப்பு

இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார்.
சென்னை,
நடிகர் வெங்கடேஷ் -இயக்குனர் திரிவிக்ரம் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் "பந்து மித்ருலா அபிநந்தனலடோ" (Bandhu Mitrula Abhinandanalato) என்ற டைட்டிலை படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டைட்டில் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் திருமணங்கள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் எஸ். ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.
Related Tags :
Next Story






