இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்...சாதனை படைத்த நட்சத்திர நடிகை - யார் தெரியுமா?

தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
சென்னை,
இந்தத் தலைமுறை கதாநாயகிகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருக்கும் நேரத்தில், ஒரு நட்சத்திர கதாநாயகி ஒரே வருடத்தில் ஏழு படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தனது கெரியரின் தொடக்கத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத நடிகை, தற்போது தொடர் படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
மேலும், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு வேடங்களிலும் நடித்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அந்த கதாநாயகி யார் தெரியுமா?. வேறு யாறுமில்லை அனுபமாதான். தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பது கடினமாக இருக்கும் இந்த நேரத்தில் அனுபமா 7 படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.
தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் அனுபமா. 2015 ஆம் ஆண்டு 'பிரேமம்' மூலம் அறிமுகமான அனுபமா, இந்த வருடம்பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த 'டிராகன்' மற்றும் 'பைசன்' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மலையாளத்தில் 'தி பெட் டிடெக்டிவ்' , 'ஜானகி’ தெலுங்கில் 'கிஷ்கிந்தாபுரி' மற்றும் 'பரதா' என இதுவரை இவரது 6 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.
அவரது ஏழாவது படமான 'லாக் டவுன்' டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. சர்வைவல் திரில்லர் படமான இந்த படம், கோவிட்-19 ஊரடங்கின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கு படமான 'போகி'யில் ஷர்வானந்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் அனுபமா.







