சமந்தாவை பாராட்டிய 'பராசக்தி' இயக்குனர்

சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் சுதா கொங்கரா கலந்து கொண்டார்.
சென்னை,
'இறுதி சுற்று', 'சூரரை போற்று' உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் 'பராசக்தி' படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில், சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் சுதா கொங்கரா கலந்து கொண்டார். அங்கு நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் சமந்தா குறித்து சுதா பேசினார். அவர் கூறுகையில்,
'சமந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய தைரியமும், எதிர்த்து போராடும் மனப்பான்மையும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. அது விரைவில் நடக்கும், "என்றார்
Related Tags :
Next Story