மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் "பேட்ரியாட்"- படப்பிடிப்பு பணி நிறைவு

மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கொச்சி,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து "பேட்ரியாட்" என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை 'டேக் ஆப்', 'மாலிக்' போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
இதில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. முழுக்க ஆக்ஷன் படமாக இது அமைந்திருப்பது டீசர் மூலம் தெரியவருகிறது.
இந்த நிலையில், 130 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மம்முட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.






