“அஜித் சாருடன் எடுத்த செல்பி.. உலகத்தையே மறக்க வச்சிருச்சு”-ஆனந்த கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை

மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற கார் பந்தய நிறுவனத்தை தொடங்கி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றார்.
அதனை தொடர்ந்து, அஜித்குமார் அடுத்ததாக மலேசியாவில் 24H என்ற கார் பந்தயத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார். இந்தநிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "முதல் தடவையாக நான் அவரை பார்த்த போது ஒரு செல்வி எடுக்க முயற்சி செய்தேன். அப்போது அஜித் சார் எனக்கு கண்டித்தார். ஆனால் சில நொடிகளுக்குப் பிறகு அவரே என்னை அழைத்து ஒரு செல்பி எடுத்துக் கொடுத்தார். என் வாழ்நாள் கனவு நனவான அந்த நொடியில் நான் உலகையே மறக்க வச்சிருச்சு" என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.






