"ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5" தொடரின் மீதமுள்ள எபிசோட்களின் ரன்டைம் வெளியானது!

டான் டிராட்சன்பெர்க் இயக்கிய "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5" தொடரின் 5, 6, 7வது எபிசோட்கள் வருகிற 26ந் தேதி வெளியாக உள்ளன.
சென்னை,
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 முழு சீசன்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் டான் டிராட்சன்பெர்க் இயக்கிய 5-வது சீசனின் முதல் 4 எபிசோட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
அதனை தொடர்ந்து வருகிற 26ந் தேதி மீதான 4 எபிசோட்டுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில், இந்த வெப் சீரிஸின் ரன்டைம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 5, 6, 7வது எபிசோட்கள் 1 மணி நேரத்திற்கு குறையாமலும், ஜனவரி 1ல் வெளியாகும் இறுதி எபிசோட் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






