சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படம்...போஸ்டர் வைரல்


The poster of the new film starring Siddu as the hero is going viral
x
தினத்தந்தி 30 Dec 2025 7:45 PM IST (Updated: 30 Dec 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தை ஸ்வரூப் ஆர்எஸ்ஜே இயக்குகிறார்.

சென்னை,

நடிகர் சித்து ஜொன்னலகட்டா ஹீரோவாக தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். தனது முந்தைய படங்களான டிஜே தில்லு மற்றும் தில்லு ஸ்கொயர் போன்ற இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே இயக்குகிறார். தற்போது, படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரைப் பார்க்கும்போது, இந்த படம் கிராமத்து பின்னணியில் திரில்லர் வகையைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

சித்து ஒரு புதிய அவதாரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அடுத்தாண்டு கோடையில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story