சசிகுமாரின் “மை லார்ட்”...சின்மயி குரலில் வெளியான ‘எச காத்தா’ பாடல்

இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் கதாநாயகியாக நடிக்கிறார்.
சென்னை,
நடிகர் சசிகுமார் 'டூரிஸ்ட் பேமலி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘மை லார்ட்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘மை லார்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ‘எச காத்தா’ என்ற இப்பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






