பாலிவுட்டில் அறிமுகமாகும் 'தி கோட்' பட நடிகை

மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் நடித்துள்ள பார்வதி நாயர் பாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்கப்போகிறார்.
‘உத்தம வில்லன்', ‘நிமிர்', ‘என்னை அறிந்தால்'. ‘தி கோட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தற்போது பாரி கே.விஜய் இயக்கத்தில் தயாராகும் ‘ஆலம்பனா' என்ற படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறார்.
ஆஷ்ரித் என்பவரை திருமணம் செய்துகொண்ட பார்வதி நாயர், திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். கவர்ச்சியிலும் குறைவைக்காமல் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் நடித்துள்ள பார்வதி நாயர் பாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்கப்போகிறார். இதற்காக சில கதைகளை அவர் ஓ.கே. செய்திருக்கிறாராம். வெகுவிரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.
இதுகுறித்து பார்வதி நாயர் கூறுகையில், ‘‘சினிமாவில் அடுத்தகட்டமாக பாலிவுட் சினிமாவிலும் நான் முன்னேற விரும்புகிறேன். என் கலை பயணத்தை திருமணம் எந்த வகையிலும் தடுத்துவிடாது. எனது புதிய அத்தியாயமாக பாலிவுட் சினிமா இருக்கும்'' என்றார்.






