அதனால்தான் அரசியலுக்கு நான் செல்லவில்லை!- நடிகர் அர்ஜுன்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அர்ஜுனிடம் அரசியலுக்கு நீங்கள் செல்லாதது ஏன் என்று கேட்கப்பட்டது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன், நடிகர் என்பதை தாண்டி டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராவார். ‘ஆக்ஷன் கிங்' என்று அழைக்கப்படும் அர்ஜுன், வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தீயவர் குலை நடுங்க' படம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அர்ஜுனிடம் ‘அரசியலுக்கு நீங்கள் செல்லாதது ஏன்?' என்று கேட்கப்பட்டது. இதற்கு அர்ஜுன் பதிலளிக்கையில், ‘‘பலரும் என்னை அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு மனம் வரவில்லை. அரசியலில் தவறு செய்தால் தட்டி கேட்க முடியாது. தற்போது இருக்கும் அரசியல் எல்லாம் பணம் தான்.
நமக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது என்னால் முடியாது. அதனால்தான் அரசியலுக்கு நான் செல்லவில்லை’’ என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story






