''ஜனநாயகனில் எனது கதாபாத்திரம் அதுதான்'' - நரேன்


Thats my character in Jana Nayagan - Narain
x

நரேன், ஜன நாயகனில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்ததாக தெரிவித்தார்.

சென்னை,

மலையாளத் தொலைக்காட்சி தொடரான மனோரதங்கள் (2024) இல் கடைசியாக நடித்திருந்த நரேன், பல படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவரது சில படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இதில் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ''ஜன நாயகன்'' படமும் அடங்கும். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், ''ஜன நாயகன்'' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக நரேன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "நான் ''ஜன நாயகன்'' படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். அது ஒரு கெஸ்ட் ரோல். இருப்பினும் அது படத்திற்கு முக்கியமான ஒன்று. அதற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டேன்" என்றார்.

ஜன நாயகனில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story