கலையை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் - ரஜினிகாந்த்


கலையை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் - ரஜினிகாந்த்
x

கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி, அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அங்கு 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, "தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்குப் பிறகு ஷங்கர் தான். அவர் படங்களில் வெறும் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூக கருத்துகள் இருக்கும், தத்துவம் இருக்கும். என்றார்.

மேலும், கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி. அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். உங்க காலில் விழுந்து வணங்குறேன்" என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story