பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமனம் - தமன்னாவுக்கு எதிர்ப்பு


Tamannaah faces opposition for being appointed as an advertising ambassador of a famous company
x

தமன்னா நியமனத்திற்கு எதிராக கன்னடர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் மைசூரு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமன்னா நியமனத்திற்கு எதிராக கன்னடர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். வேறு மொழி நடிகைக்கு பதிலாக கன்னட நடிகை ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு தனது முடிவை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story