6 நிமிட ஆட்டத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா


6 நிமிட ஆட்டத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா
x

கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார்.

தமன்னா இப்போதெல்லாம் பாலிவுட் சினிமாவே கதி என்று இருக்கிறார். கடைசியாக தமிழில் ‘அரண்மனை-4' படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக இந்தி படங்கள் நடித்து வருகிறார்.

இதுதவிர படங்களில் சிறப்பு பாடல்களில் நடனமாடவும் ஒப்பந்தமாகி வந்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா கலந்துகொண்டு நடனமாடி இருந்தார். அதுதொடர்பான வீடியோவும் இணைதளத்தில் வைரலானது. அந்த நடனத்துக்காக அவர் பெற்ற சம்பளம் பற்றிய தகவல் தற்போது கசிந்திருக்கிறது.

அந்தவகையில் 6 நிமிடங்கள் நடனத்துக்கு ரூ.6 கோடியை அவர் சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம் சினிமா தாண்டி நடனத்திற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை தமன்னா பெற்றுள்ளார்.

1 More update

Next Story