திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும் - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி


திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும் - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
x

கோப்புப்படம் 

நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று ஸ்ரீநிதி ஷெட்டி கூறியுள்ளார்.

இந்திய சினிமாவை கவனிக்க வைத்த ‘கே.ஜி.எப்.' படத்தில் யாஷ் ஜோடியாக நடித்து திரும்பி பார்க்க வைத்தவர், ஸ்ரீநிதி ஷெட்டி. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா', தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3' படங்களில் நடித்தார். சமீபத்தில் ‘தெலுசு கதா' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீநிதி ஷெட்டியிடம் ‘நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு, "உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை படங்களின் எண்ணிக்கை மட்டும் திறமையை பளிச்சிட வைத்திடாது. திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும். அந்தவகையில் நான் பளிச்சிட்டு வருவதாகவே உணருகிறேன்", என்று அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story