"லோகா" படத்தில் பணியாற்றியவர்களை வாழ்த்திய சூர்யா..!

லோகா படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் சூர்யா 46 படத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா. இவர் தற்போது ''லக்கி பாஸ்கர்'' இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா46 என்று பெயரிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யா "லோகா" படம் பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து, 'சூர்யா 46' படத்தில் பணியாற்றும் லோகா படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கேக் வெட்டி வாழ்த்துத் தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, கலை இயக்குநர் ஜீது செபாஸ்டின், கலை வடிவமைப்பாளர் பங்கலான் ஆகிய மூவரும் லோகா படத்தில் பணியாற்றி, தற்போது சூர்யா 46 படத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
