சந்தீப் கிஷனின் 'மசாகா' ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு


Sundeep Kishan’s Mazaka locks its OTT release date
x
தினத்தந்தி 26 March 2025 8:06 AM IST (Updated: 26 March 2025 8:18 AM IST)
t-max-icont-min-icon

இப்படத்தில் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது 'மசாகா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரிநாத் ராவ் நக்கினா இயக்கிய இப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. காமெடி கதைக்களத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 28-ம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் 'மசாகா' வெளியாகிறது.


Next Story