குழந்தையோடு இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி- வைரலாகும் புகைப்படங்கள்

கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அடுத்ததாக நடிகர் நானியுடன் இணைந்து நடித்த ஹிட் 3 படம் திரைக்கு வந்து ரூ.100 கோடி வசூலை பெற்றது. படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக ராசிகண்ணா நடிக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி ஸ்ரீநிதிக்கு எப்போ திருமணம் ஆச்சு, அவருக்கு குழந்தைகள் இருக்கின்றனரா? என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது. விமர்சனங்களுக்கு ஸ்ரீநிதி பதிவு விடையை கொடுத்தது. அவரது பதிவில், "நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை" என பதிவிட்டுள்ளார்.