உண்மையாகவே நடந்தது...ஒருநாள் கால் உடைவதுபோல் கனவு கண்டேன் - பிரபல நடிகை

தனது கனவில் கண்டது சில நேரங்களில் உண்மையாகவே நடக்கும் என்று அவர் கூறினார்.
சென்னை,
பிரபா தொகுப்பாளினியும் நடிகையுமான சுமா, தனது கனவில் கண்டது சில நேரங்களில் உண்மையாகவே நடக்கும் என்று கூறினார். சமீபத்தில், அவர் ஒரு பாட்காஸ்டில் பங்கேற்று தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்ககை பற்றிய சுவாரசிமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‘ஒரு முறை படப்பிடிப்பின்போது நடிகர் ஒருவருக்கு கால் உடைந்ததுபோல் கனவு கண்டேன். அப்போது தொலைபேசிகள் எதுவும் இல்லை. லேண்ட்லைனில்தான் பேச வேண்டியிருந்தது. அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மறுநாள் காலையில், நான் அவருக்கு போன் செய்து 'நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், கால் உடைந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் . பின்னர் நான் கண்ட கனவைப் பற்றி அவரிடம் சொன்னேன்.
படப்பிடிப்பில் கார் ஓட்டிச்சென்றபோது ஒரு மரத்தில் மோதியதாக அவர் கூறினார். வேலும், ஒரு முறை நாள் ஒரு கோவிலுக்குச் செல்வதுபோல் கனவு கண்டேன். மறுநாள் அதே கோவிலுக்கு சென்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு நாள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாவதுபோல கனவு காடேன். இதனால் விமானத்தில் ஏறவே பயந்தேன். சில நேரங்களில் எனக்கு வரும் கனவுகள் இப்படித்தான் பயமுறுத்துகின்றன’ என்றார்.






