பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் கதாநாயகி இவரா?

இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
மேலும், அசோக் செல்வன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்க உள்ளதாக தெரிகிறது.