’தமிழ் திரைப்பட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கியிருக்கும் படம் சிறை ’ - அமீர்

அமீர் ‘சிறை’ படக்குழுவினருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
விக்ரம் பிரபுவின் ’சிறை’ படத்தை பார்த்த இயக்குநரும் நடிகருமான அமீர், பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"சிறை" தமிழ்த்திரைப்பட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கியிருக்கும் திரைப்படம். புதிய கதைக்களம். புதிய முகங்கள், புதிய பரிமாணம் என எல்லா தனங்களிலும் மிளிர்கிறது.
இப்படி ஒரு கதையை சித்சித்த தமிழ் அவர்களுக்கும். அதை தனது முதல் திரைப்படமாக இயக்க வேண்டும் என்கிற வேட்கையோடு வேலை செய்திருக்கும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கும் அதை மனமுவந்து தயாரித்த தயாரிப்பாளர் வித் குமார் அவர்களுக்கும் அப்துள் என்கிற கதாபாத்திரத்தில் நம் மனதோடு நிறைத்திருக்கும் ஒரு அக்சய் குமார் அவர்களுக்கும்
கலையரசி கதாபாத்திரத்தில் நம்மை உருக வைத்திருக்கும் செல்வி அனிஸ்மா அவர்களுக்கும் 'கதிரவன்" என்கிற காவலர் கதாபாத்திரத்தில் மனித நேயராக வாழ்த்திருக்கும் விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துகளும், நன்றிகளும்' என்று தெரிவித்திருக்கிறார்.






