ஷாருக்கானின் மிகப்பெரிய தோல்வி படங்கள்...!

ஷாருக்கான் தனது கெரியரில் தோல்விகளை விட அதிகப்படியான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சென்னை,
பாலிவுட்டின் மன்னன் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தனது கெரியரில் அதிகப்படியான வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், சில தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஷாருக்கானின் சில பெரிய தோல்வி படங்களை தற்போது காண்போம்.
ஜீரோ (2018)
படத்தின் கதைக்களம் தனித்துவமாக இருந்தபோதிலும், அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - அனுஷ்கா சர்மா
இயக்குனர் - ஆனந்த் எல். ராய்
ரா.ஒன் (2011)
அதிக பட்ஜெட், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் இருந்தபோதிலும், படம் நன்றாக ஓடவில்லை.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - கரீனா கபூர்
இயக்குனர் - அனுபவ் சின்ஹா
தில்வாலே (2015)
பலவீனமான கதைக்களம் படத்தை தோல்வியடையச் செய்தது
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - கஜோல்
இயக்குனர் - ரோஹித் ஷெட்டி
டூப்ளிகேட் (1998)
இது ஷாருக் நடித்த மற்றொரு அதிரடி நகைச்சுவை படம். இது பார்வையாளர்களை எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - சோனாலி பிந்த்ரே
இயக்குனர் - மகேஷ் பட்
ஸ்வதேஸ் (2004)
இந்தப் படம் இப்போது அவரது முன்மாதிரியான படங்களில் ஒன்றாக கருதப்பட்டாலும், வெளியான நேரத்தில், பார்வையாளர்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை.
நடிகர் -ஷாருக்கான்
நடிகை - காயத்ரி ஜோஷி
இயக்குனர் - அசுதோஷ் கோவரிகர்
திரிமூர்த்தி (1995)
ஷாருக்கானின் மற்றொரு தோல்விப் படமாக இது உள்ளது. இதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - கவுதமி
இயக்குனர் - முகுல் எஸ். ஆனந்த்
பஹேலி (2005)
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - ராணி முகர்ஜி
இயக்குனர் - அமோல் பலேகர்
பேன் (2016)
ஷாருக்கானின் இரட்டை வேடமும் சுவாரஸ்யமான கதைக்களமும் இருந்தும் கூட ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - வாலுஷா டி சூசா
இயக்குனர் - மனீஷ் சர்மா
ஜப் ஹாரி மெட் சேஜல் (2017)
'ஜப் ஹாரி மெட் சேஜல்' ஷாருக்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்த மற்றொரு தோல்விப் படம்.
நடிகர் - ஷாருக்கான்
நடிகை - அனுஷ்கா சர்மா
இயக்குனர் - இம்தியாஸ் அலி