நிவின் பாலி - பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘சர்வம் மாயா’...ரிலீஸ் தேதி அறிவிப்பு


Sarvam Maya in theatres from 25th December
x

இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. எல்.சி.யுவின் ’பென்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது 'பாச்சுவும் அற்புத விளக்கும்' பட இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் ’சர்வம் மாயா’ படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தினை இயக்கிய சத்தியன் அந்திகாட்டின் மகன்தான் அகில் சத்யன். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிகை பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story