'கங்குவா'வையடுத்து நானி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா கார்த்தி?

சூர்யாவின் 'கங்குவா' படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சூர்யாவின் 'கங்குவா' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த கார்த்தி அடுத்ததாக நானியின் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
'ஹிட் 4' படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இதனால் அதற்கான லீடுக்காக அவர் ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் நானி 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தையடுத்து 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.