சம்யுக்தா மேனனின் லைன் அப்பில் இருக்கும் மாஸ் படங்கள்!

சம்யுக்தா மேனன், கிட்டத்தட்ட 5 படங்களை தற்போது தன் கைவசம் வைத்திருக்கிறார்.
சென்னை,
தமிழில் வாத்தி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சம்யுக்தா மேனன், கிட்டத்தட்ட 5 படங்களை தற்போது தன் கைவசம் வைத்திருக்கிறார்.
இதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்கள் ஆகும். அவரது லைன் அப்பில் இருக்கும் திரைப்படங்களை தற்போது காண்போம்.
"ஹைந்தவா"
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் "ஹைந்தவா" என்ற பக்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
"அகண்டா 2"
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில், போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "அகண்டா 2" படத்தில், சம்யுக்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
"நாரி நாரி நடும முராரி"
'எங்கேயும் எப்போதும்'பட நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு "நரி நரி நடுமா முராரி" எனப்பெயரிடப்பட்டுள்ளது. அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
"மஹாராக்னி"
தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் உப்பலபதி இயக்கும் இப்படத்தில் கஜோல், சம்யுக்தா, பிரபுதேவா, நசிருதீன் ஷா, ஜிஷு சென் குப்தா, ஆதித்ய சீல், சாயா கதம், பிரமோத் பதக் ஆகியோர் நடிக்கின்றனர். இது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது
''விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படம்''
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
sam