சம்யுக்தா மேனனுக்கு அடித்த ஜாக்பாட்...4 மாதங்களுக்குள் 4 படங்கள் ரிலீஸ்


Samyuktha gears up for four releases in four months
x

சம்யுக்தாவின் 4 படங்கள் திரைக்கு வர இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

சென்னை,

சம்யுக்தா தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் நான்கு மாதங்களுக்குள் வெளியாக உள்ளன.

டிசம்பர் 5 ஆம் தேதி "அகண்டா 2" படத்திலிருந்து இது துவங்குகிறது. இது இந்த ஆண்டு வெளியாகும் அவரது ஒரே படமாகும். அடுத்த ஆண்டில், சம்யுக்தா இரண்டு அடுத்தடுத்து படங்களுடன் திரைக்கு வருகிறார்.

முதலில் "சுயம்பு", நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது. அதே நேரத்தில், நீண்ட காலமாக தாமதமாகி வந்த "நரி நரி நடும முராரி" படமும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவரது முதல் இந்தி படம் ஏப்ரலில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 4 மாதங்களுக்குள் அவரது 4 படங்கள் திரைக்கு வர இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

1 More update

Next Story