சிறந்த நடிகருக்கான விருதை வென்ற எஸ்.ஏ.சந்திரசேகர்

'கூரன்' படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை பெற்ற எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 'கூரன்' என்ற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கிய இந்த படம் நாயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சத்யன். பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன். ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கூரன் படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை பெற்றதால் இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும்போது, ‘‘45 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. தயாரிப்பாளர், இயக்குனர் தாண்டி நடிகராகவும் பயணிக்கிறேன். சினிமாவில் நம்பிக்கையோடும், அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும், அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இதுபோன்ற விருதுகள் உதாரணம்'', என்றார்.






