ரோபோ சங்கரின் அஸ்தியை கரைக்க வாரணாசி சென்ற குடும்பத்தினர்

ரோபோ சங்கரின் அஸ்தியை கங்கையில் கரைக்க மொத்த குடும்பமும் வாரணாசிக்குச் சென்றுள்ளனர்.
தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் ரோபோ ஷங்கர்.சிரிக்கவே மறந்த பலரை சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர் கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாமல் கலந்துகொண்டு வந்தார். அவரின் திறமை கண்டு வெள்ளித்திரை அழைக்க அதிலும் ஒரு வலம் வந்தார். அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார்.
இவ்வாறு மக்களை சிரிக்க வைத்த ரோபோ உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு குடும்பம், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அவரது அஸ்தியை கங்கையில் கரைக்க மொத்த குடும்பமும் வாரணாசிக்குச் சென்றுள்ளனர். அதை உருக்கமான பதிவுடன் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ உங்கள் கையைப் பிடிச்சு நான் பார்த்த உலகமே எனக்கு எல்லாம்னு நினைச்சேன், நான் நடக்க ஆரம்பிச்சதும், சிரிச்சதும், பயந்ததும்… எல்லா நேரத்திலும் எனக்கு துணை நின்றது உங்க கைதான், அப்பா. ஆனா இன்று…அதே கையால நான் உங்க அஸ்திய கொட்டுவேன் என்று எதிர்பார்க்க்க வில்லை. தேட முடியாத இடத்துல நான் உங்களை தொலைச்சிட்டேன் அப்பா. “நீங்க திரும்பி வருவீங்க”ன்னு ஒரு குட்டி குழந்தை போல நம்பிக்கையோட காத்திருக்கிறேன். இது சாத்தியமே இல்லன்னு தெரியும்…ஆனா உங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கனும், “அப்பா”ன்னு சொல்லனும்,ஒரு தடவை உங்க கையைப் பிடிக்கனும் என்ற ஆசை…உங்க சிரிப்பு…உங்க குரல்…உங்க நடையொலி…எதுவுமே மறையல, அப்பா. இந்த நிமிடம் வரை உங்கள ரொம்ப மிஸ்பண்றேன் அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.






