ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய "கருப்பு" படத்தின் ரிலீஸ் அப்டேட்

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கருப்பு படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







