ரவி தேஜா - ஸ்ரீலீலாவின் 'மாஸ் ஜாதரா': தயாரிப்பாளரின் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி


Ravi Teja’s Mass Jathara postponed – Here’s when it will hit the big screen
x

இப்படம் மே 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

'மிஸ்டர் பச்சன்' படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படத்தில் நடித்துவருகிறார். 'மாஸ் ஜாதரா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார்.

இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 'தமாகா' படத்திற்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியநிலையில், மே 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி மே மாதம் இப்படம் வெளியாகாது என்றும் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நாக வம்சி தெரிவித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, படத்தின் புரமோசன் பணிகள் துவங்கும் என்றும் கூறி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


Next Story