பாடகி கெனிஷாவுடன் புத்தாண்டு கொண்டாடிய ரவி மோகன்

ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘புரோ கோட்’ அவரே நடித்து வருகிறார். இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி தயாரிக்கிறார்.
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் பாடகி கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.






