வாட்ஸ் அப் மோசடி - ரசிகர்களை எச்சரித்த ரகுல் பிரீத் சிங்

சமீபத்தில் நடிகை அதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை,
தற்போது பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை அதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் எல்ஸ் பக்கத்தில் தனது வாட்ஸ்அப் எண் என்று கூறி ஒரு போலி எண்ணைப் பயன்படுத்தி அரட்டை அடிப்பதாக பதிவிட்டுள்ளார்.
அதில், 'வணக்கம் நண்பர்களே...யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்வது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் உரையாடல்களிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து பிளாக் செய்யுங்கள்’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






