’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ - 2 நாட்களில் இவ்வளவு வசூலா?

நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், பரவலான வெளியீடு இல்லாமல் இந்த வசூலை இப்படம் எட்டி இருக்கிறது.
சென்னை,
சமீபத்திய தெலுங்குப் படமான ’ராஜு வெட்ஸ் ராம்பாய்’, பாக்ஸ்ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. அகில் ராஜ் உத்தேமாரி மற்றும் தேஜஸ்வி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சைலு காம்பதி இயக்கியுள்ளார்.
இந்தப் படம் இந்தியா முழுவதும் இரண்டு நாட்களில் சுமார் ரூ.4.04 கோடி வசூலித்துள்ளது. நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், பரவலான வெளியீடு இல்லாமல் இந்த வசூலை இப்படம் எட்டி இருக்கிறது. 3வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
சைதன்யா ஜொன்னலகட்டா, சிவாஜி ராஜா மற்றும் அனிதா சவுத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ள இப்படத்தை வேணு உடுகுலா மற்றும் ராகுல் மோபிதேவி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Related Tags :
Next Story






