நாளை வெளியாகும் ரஜினியின் 'கூலி' டிரெய்லர்

ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
'கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.
ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா நாளை மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகுமென சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.