சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு


சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு
x

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு, ரைட்டர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். நீலம் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமைப்புகளை பா.ரஞ்சித் நடத்தி வருகின்றார்.

ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் பா.ரஞ்சித் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இருவரும் அடுத்த படத்தில் ஒன்றாக இணைவார்களா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1 More update

Next Story