“கல்கி 2” படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இவரா?


“கல்கி 2” படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இவரா?
x

“கல்கி 2” படத்தில் தீபிகா கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்தாண்டு வெளியான படம் ‘கல்கி 2898 ஏ.டி’. அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து சாதனை படைத்தது.

படத்தில் கல்கியைச் சுமக்கும் தாயாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். இதற்கிடையில் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி, ஆலியா பட் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களது கால்ஷீட் கிடைக்காத நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக பெரியளவில் சம்பளமும் பேசப்படுகிறதாம்.

ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்திலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story