தலையில்லாத உடல் யாருடையது?...ஒரு வருடம் கழித்து ஓடிடிக்கு வந்த சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்களை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
சென்னை,
சஸ்பென்ஸ், குற்றம், திரில்லர் போன்ற திரைப்படங்களுக்கு ஓடிடியில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது பெரிய வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும். நாம் இப்போது பார்க்கப்போகும் படமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
திரையரங்குகளில் சராசரியாக இருந்த இந்த கிரைம் திரில்லர் படம், சுமார் ஒரு வருடம் கழித்து கடந்த வாரம் ஓடிடிக்கு வந்தது. ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காவல் நிலையத்திற்கு அருகில் தலையில்லாத உடல் காணப்படும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. அது யாருடைய சடலம்? கொலையாளி யார்? அவர் ஏன் சடலத்தை காவல் நிலையத்தில் விட்டுச் சென்றார்? போன்ற கேள்விகளுடன் வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்துவார்கள், பின்னர் கதை மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்கிறது.
அது யாருடைய உடல் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டார்களா? கொலை செய்தது யார்? அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்ன ? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இந்த கிரைம் திரில்லர் படத்தை பார்க்க வேண்டும்.
எதிர்பாராத திருப்பங்களுடனும் அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸுடனும் முடிவடையும் படத்தின் பெயர் பிரம்மவரம் பிஎஸ் பரிதிலோ. இம்ரான் சாஸ்திரி இயக்கியுள்ள இந்த படத்தில் குரு சரண், சூர்யா ஸ்ரீனிவாஸ், ஸ்ரவந்தி பெல்லம்கொண்டா, பாலகம் ரூபா லட்சுமி, ஆங்கர் ஹர்ஷினி, சம்மேதா காந்தி, ஜீவா, பிரேம் சாகர், ருத்ர திப்பே சுவாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்களை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.