தேசிய திரைப்பட விருதுகள் - கமல்ஹாசன் வாழ்த்து


National Film Awards - Kamal Haasans congratulations
x

‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றது.

சென்னை,

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார்.

71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில், 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றது. அதேபோல், வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி. பிரகாஷ் வென்றார். இந்நிலையில், தேசிய திரைப்பட விருது வென்றவர்களுக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது.

'பார்க்கிங்' திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற ராணி முகர்ஜிக்கும் கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார்.

1 More update

Next Story