”அமெரிக்க ஆவி” படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகும் நெப்போலியன்!


”அமெரிக்க ஆவி” படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆகும் நெப்போலியன்!
x
தினத்தந்தி 4 Dec 2025 12:53 PM IST (Updated: 4 Dec 2025 5:32 PM IST)
t-max-icont-min-icon

அதிக பொருட்செலவில் உருவாக உள்ள ஹாரர் படத்தில் நெப்போலியன் நடிக்க உள்ளார்.

தமிழ் திரை உலகில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்கள் என பல்வேறு கேரக்டர்களில் நடித்து பிரபல நடிகராக இருந்தவர் நெப்போலியன். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சினிமா, அரசியலில் இருந்து விலகி இருந்த நெப்போலியன் மீண்டும் தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். அமெரிக்க ஆவி என்ற பெயரில் அவரது மகன்கள் தனுஷ், குணால் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

இது குறித்து நெப்போலியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- பல படங்களில் நடித்து பேரும், புகழையும் பெற்ற நான், கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்து, அந்த படத்தை ஜீவன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களது மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ‘அமெரிக்க ஆவி’ என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர்.

அதற்கான கதை தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இப்படம் அதிக பொருட் செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது.

இந்த படத்தை தஞ்சை ஜேபிஆர். இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017-ம் ஆண்டு இயக்கியுள்ளார். இப்படத்திற்காக தொழில் நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற் கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்…!என்றும் அன்புடன் உங்கள் நெப்போலியன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story