’என்னுடைய கதாபாத்திரம் மிகவும் புதியது...தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி’ - கீதா கைலாசம்

’அங்கம்மாள்’ படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
’அங்கம்மாள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்
இதை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இயக்குனர் கதையைச் சொன்னவுடன், தனது கதாபாத்திரம் புதியதாக உணர்ந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார். படத்தைப் பார்த்த பல திரைப்பட பிரபலங்கள் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினர், அத்தகைய விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறினார்.
இந்த ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா மற்றும் நியூயார்க் இந்திய திரைப்பட விழா உள்ளிட்டவைகளில் திரையிடப்பட்ட அங்கம்மாள் திரைப்படம் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.






