முனீஸ்காந்த்தின் “மிடில் கிளாஸ்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு


முனீஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் வருகிற 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘மிடில் கிளாஸ்’ படத்தின் ‘மைனா நீ’ பாடல் வெளியாகியுள்ளது. கானா முத்து வரிகளில் கானா முத்து இப்பாடலை பாடியுள்ளார்.

1 More update

Next Story