மிருணாள் தாகூரின் புதிய காதல் கதை...'தோ தீவானே சேகர் மே' மீதான எதிர்பார்ப்பு!

மிருணாள் தாகூர் மற்றொரு காதல் கதையில் நடித்து வருகிறார்.
சென்னை,
'சீதாராமம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் மிருணாள் தாகூர். தற்போது அவர் டகோயிட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மிருணாள் தாகூர் மற்றொரு காதல் கதையில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் 'தோ தீவானே சேகர் மே' என்ற காதல் படத்தில் அவர் நடித்து வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப் படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார்.
சமீபத்தில், படத்தின் புதிய போஸ்டர்களை சமூக ஊடகங்களில் மிருணாள் தாகூர் பகிர்ந்தார். இந்த போஸ்டர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. இந்தப் படத்தில் மிருணாள் நடிக்கும் வேடம், கடந்த காலங்களில் அவர் நடித்த வேடங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதல் படங்களுக்கு சிறப்பு இடம் கொடுக்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் பேனரில் இருந்து வரும் இந்தப் படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






