மிருணாள் தாகூரின் அடுத்த படத்தில் 'ஹீரோ' இவரா?

தற்போது மிருணாள் தாகூர் தெலுங்கில் 'டகோயிட்' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பேமிலி ஸ்டார்'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியது. தற்போது இவர் தெலுங்கில் 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், பிரபாஸுடம் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ,மிருணாள் தாகூர் தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக ஜான்வி கபூர், ஸ்ரத்தா கபூர் மறும் திஷா பதானி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படும்நிலையில், மிருணாள் தாகூர் இப்படத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.