நடிகை நிஹாரிகா தயாரிக்கும் 2-வது படம்


Mega daughter teams up with MAD Square actor for new film
x

இதில் மேட் ஸ்கொயர் நடிகர் சங்கீத் சோபன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா கொனிடேலா. இவர் தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸ் மூலம் 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இப்போது மற்றொரு படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இதில் மேட் ஸ்கொயர் நடிகர் சங்கீத் சோபன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை மானசா ஷர்மா இயக்க உள்ளார். மானசா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இவர் முன்பு பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸின் வெப் தொடரான "ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி"-ல் கிரியேட்டிவ் இயக்குனராகவும், "பெஞ்ச் லைப்"-ல் இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story