விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும் - நடிகை திரிஷா

விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என்று நடிகை திரிஷா விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடசத்திரமாக இருக்கிறார். நடிகை திரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் பாடலுக்கு திரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று துபாயில் சைமா விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகை திரிஷாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் அவர் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர்களை குறித்து திரிஷா பேசினார்.
அப்போது திரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதன் பின்னர் திரிஷா “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர்” என கூறியுள்ளார். நடிகர் விஜய் குறித்து திரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம பகிர்ந்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.