'மேங்கோ பச்சா' - கதாநாயகனாக அறிமுகமாகும் சஞ்சித் சஞ்சீவ்...


Mango Pachcha release date: Sanchith Sanjeev to give audiences Sankrantige ondu Kannada cinema
x
தினத்தந்தி 16 Nov 2025 5:45 PM IST (Updated: 16 Nov 2025 5:46 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் மருமகன் சஞ்சித் சஞ்சீவ், சுதீப்பின் மனைவி பிரியா தயாரிக்கும் ’மேங்கோ பச்சா’ மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ’மேங்கோ பச்சா’ திரைப்படம் ஜனவரி 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் பெரிய கன்னட படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், 'மேங்கோ பச்சா' ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பு விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' வெளியாகிறது. அதே போல் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படமும் வெளியாகிறது. இதனால், சஞ்சித்தின் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

அறிமுக இயக்குனர் விவேகா இயக்கி உள்ள 'மேங்கோ பச்சா' மைசூருவை மையமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது.

1 More update

Next Story