மம்முட்டியின் புதிய பட அறிவிப்பு.. இயக்குனர் இவரா?


மம்முட்டியின் புதிய பட அறிவிப்பு.. இயக்குனர் இவரா?
x
தினத்தந்தி 22 Dec 2025 9:30 AM IST (Updated: 22 Dec 2025 9:30 AM IST)
t-max-icont-min-icon

'களம் காவல்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மம்முட்டி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'களம் காவல்'. இந்த படத்தில் நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மம்முட்டி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தினை 'அனுராக கரிக்கின் வெள்ளம்' படத்தின் மூல இயக்குனராக அறிமுகமானவர் கலித் ரகுமான் இயக்க உள்ளார். இவர் "உண்டா , லவ், தள்ளுமலா" போன்ற இயக்கிய மலையாளத் திரைத்துறை ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் மம்முட்டி இயக்குனர் கலித் ரகுமான் கூட்டணியில் உருவாகவுள்ளதாக திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த பதிவை நடிகர் மும்முட்டி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கூட்டணி 'உண்டா' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

1 More update

Next Story