மஹத்திற்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

மஹத் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் மஹத் ராகவேந்திரா, மங்காத்தா. ஜில்லா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மாநாடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இருப்பினும், அவற்றில் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சிறிது இடைவெளி எடுத்த மஹத் ராகவேந்திரா, தற்போது தனது புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில் சிக்ஸ் பேக் உடலுடன் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மஹத் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.






