ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு

டிஎன்ஏ டெஸ்டுக்கு வராமல் ஒரு மாதமாக மாதம்பட்டி ரங்கராஜ் தலை மறைவாக உள்ளதாக ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
சென்னை,
தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்' என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். ‘நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் டி.என்.ஏ. பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்', என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "காணவில்லை.. ராகா ரங்கராஜ்- வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜுவை கடந்த 1 மாதமாக காணவில்லை டிஎன்ஏ டெஸ்ட்-க்கு தலைமறைவாக உள்ளார். இவரை இவண்டில் (event) பார்த்தால் உடனே எனக்கு மெசேஜ் (டிஎம்) செய்யவும்.
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஓளிந்து ஓடுகிறார். புரூப் பண்ணினா தான் சார் மாடிப்பர். இல்ல ஒருவேலை பணம் குடுத்து டிஎன்ஏ டெஸ்ட் கரெக்ட் பண்ண டைம் எடுக்கிறார் போல. நீங்க தான் எல்லாமே லீகலா பண்ணுற ஆள் ஆச்சே இதை மட்டும் ஏன் உங்களால் லீகலா பேஸ் பண்ண முடியவில்லை ????
என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்..." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






